ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள விடயம்...

Saturday, 14 December 2019 - 20:00

+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...
சிலியில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினரும் இராணுவத்தினரும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுதவிர சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகள் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக களகத் தடுப்பு துப்பாக்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 345 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர இரண்டு மாத கால பகுதியினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உண்மைத் தன்மை வெளிப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.