ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை பயன்படுத்தும் கட்டார் வானூர்திகள்..!

Sunday, 19 January 2020 - 19:34

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்பினை கட்டார் மற்றும் பல பாரசீக குடாவை சேர்ந்த வானூர்தி சேவைகள் தொடர்ந்தும் உபயோகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளிலும் உள்ள நகரங்களுடனான வானூர்தி சேவைகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதன் பின்னர், ஏனைய சர்வதேச சேவைகள் ஈரான் மற்றும் ஈராக் வான்பரப்பினை தவிர்த்து மாற்று வழிகளை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரசீககுடாவை சேர்ந்த வானூர்திகள் தமது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுடனான சேவைகளை மேற்கொள்ளும் போது, இடைநிறுத்தலுக்காக ஒரு சில வானூர்தி நிலையங்களே உள்ளதாக வானூர்தி சேவைகளை மேற்கொள்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.