மாத்தறையில் குழந்தை பிரசவித்த ஆண் தற்போது எடுத்துள்ள அதிரடி முடிவு..!

Friday, 24 January 2020 - 11:08

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81..%21
மாத்தறை மருத்துவமனையில் ஆண் ஒருவர் பிரசவித்த குழந்தையை ஏற்றுக் கொள்ள அவரே மறுப்பு தெரிவித்துவருவதாக மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

தனக்கு குழந்தையை பராமறிக்க முடியாது என்றும், குழந்தையை எவறேனும் வளர்ப்பதற்கு இணங்குவார்களாயின் அவர்களுக்கு வழங்குமாறும் குழந்தையினை பெற்றெடுத்தவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆணாக வசித்து வந்த குறித்த பெண்ணுக்கு, நீண்டகாலமாக காதலி ஒருவர் இருந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னைய பதிப்பு............

வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக காற்சட்டையும் ஆண்கள் அணியும் மேற்சட்டையும் அணிந்தவாறு தாடியுடன் நபர் ஒருவர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தனக்கு தொடர்ச்சியாக தாங்கி கொள்ள முடியாதவாறு வயிற்று வலி காணப்படுவதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரை வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய மருத்துவர்கள் ஆண்கள் நோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆண்கள் நோயாளர் சிகிச்சை அறையில் கடமையில் இருந்து மருத்துவர்கள் குறித்த நபரின் வயிற்றினை பரிசோதித்த பின்னர் அவர் கர்பமடைந்திப்பதற்காக அறிகுறிகள் காணப்படுவதாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

இதன் பின்னர் அவரின் வயிற்று பகுதியினை ஸ்கேன் செய்வதற்கு மருத்துவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளனர்.

ஸ்கேன் செய்ததன் பின்னர் அவர் கர்பிணி என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உடனடியாக அவருக்கு கர்ப்பிணி தாயர்மார்கள் அணியும் ஆடை மருத்துவமனையின் நிர்வாகத்தினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

கர்பபிணி தாய்மார்களின் உடையினை அணிவித்த மருத்துவர்கள் அவரை மகபேற்று தாய்மார்கள் தங்கும் அறைக்கு மாற்றியுள்ளனர்.

முகத்தில் தாடியுடன் முழுமையாக ஆண் உருவத்தினை கொண்ட நபர் ஒருவர் மகப்பேற்று பிரசவ அறைக்கு கர்ப்பிணி தாயர்மார்களின் ஆடையுடன் வருகை தந்ததும் அங்கிருந்த ஏனைய கர்ப்பிணி தாய்மார்கள் வியப்புடன் அவரை பார்த்துள்ளனர்.

சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த நபர் நேற்றிரவு கடும் வேதனைக்கு உள்ளான நிலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார்.

எனினும் அவருக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதோடு தாய்ப்பால் கொடுக்கும் வகையில் அவரது மார்ப்பகம் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.

காரணம் குறித்த நபர் நீண்ட காலத்திற்கு முன்னர் தனது மார்பகங்களை சத்திரசிகிச்சை மூலமாக அகற்றிக்கொண்டுள்ளார் என வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபர் இயற்பிறவியில் பெண்ணாக காணப்பட்டாலும் அவர் ஆண் சுபாபம் கொண்டே இதுவரை காலம்  வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை தொடர்பில் மருத்துவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் மாத்தறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

இந்த தகவலானது பரவியதும் அவரை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் மாத்தறை மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கின்றது.

மேலும் அவர் தன்னுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆணின்  பெயரிலேயே பெற்றுக்கொண்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக கடமையாற்றி வந்த இவர் குழந்தை ஒன்றினை பிரசவித்த பின்னரே பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.