நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரை எந்தவித குரல் பதிவுகளையும் நாடாளுமன்றத்திற்கு கையளிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த குரல் பதிவுகள் சபைப்படுத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பில் பதில் ஒன்றை வழங்குமாறு ராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று பிற்பகல் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பு சபை இன்றைய தினம் கூடவுள்ளது.
இதன்போது, 19வது அரசியலமைப்பு திருத்ததின் கீழ் காவற்துறை ஆணைக்குழு, கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது