தினேத் மெலான் மாவுலவின் நெருங்கிய உறவினர் கைது

Friday, 24 January 2020 - 13:40

+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
நவகமுவ - தெடிகமுவ பகுதியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஊருஜூவா என அழைப்படும் தினேத் மெலான் மாவுலவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள அவர் ரணால மற்றும் நவகமுவ பகுதியில் சிலரிடம் கப்பம் கோருகின்றமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.