பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் தகவல் தொழில்நுட்ப பூங்கா..

Friday, 24 January 2020 - 13:05

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE..
அமைச்சர் பந்துல குணவர்தனவின் தகவல் மற்றும் தொடர்பாடல், தொழில்நுட்பம், உயர்கல்வி, புத்தாக்க அமைச்சின் கீழ் இருந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதற்கமைய இதன் பின்னர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் முன்னெற்றத்திற்கான நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி முதல் அமைச்சர் பந்துல குணவர்தன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கமைய அவர் அன்றைய தினம் முதல் அமுலாகும் வகையில் தகவல் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கைச்சாத்துடன் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.