பிணைமுறி மோசடி தொடர்பிலான மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் முன்னாள் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கோப் குழுவின் தலைவராக செயற்பட்ட காலத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த கணக்காய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டதாகும்.
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் பிணைமுறி மோசடி தொடர்பிலான நீதிமன்ற விசாரணைக்கு அது சாட்சி ஒன்றாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.