11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் 13 பேருக்கு பிணை

Friday, 24 January 2020 - 14:07

11+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88
கொழும்பில் வசித்து வந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட காணாமல் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்ட கொமாண்டர் டீ கே பி தசாநாயக்க உள்ளிட்ட 13 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கையின் அரச படைத்தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்த காலப்பகுதியான கடந்த 2008 ஆம் ஆண்டு முதல 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 22 ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த 13 பேருக்கும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்களை பிணையில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பிணையும் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தலா இரு சரீரபிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.