கப்பம் வழங்க முயற்சித்த இருவர் கைது...!

Friday, 24 January 2020 - 13:43

%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...%21
பொலநறுவை கண்காணிப்பு முகாமையாளருக்கு கப்பம் வழங்க முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் இலஞ் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முகாமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் கப்பம் கொடுக்க முயற்சித்த வேளையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லேல்ல வனப்பகுதியில் புகையிரத திணைக்களத்திற்குரிய காணியில் சட்டவிரோதமான முறையில் கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சிக்கு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதிருக்கவே குறித்த இருவரும் கப்பம் வழங்க முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.