பயணித்த பேருந்தின் சில்லில் சிக்குண்ட தாய் மற்றும் மகள்...!

Friday, 24 January 2020 - 14:48

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
கிதுல்கல கோனகமுவ சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அநுராதபுரம் - பகுதிக்கு வழிபாட்டிற்கு செல்வதற்காக குறித்த இருவரும் பேருந்து ஒன்றில் வருகை தந்திருந்ததோடு  பிரிதொரு பேருந்திற்கு மாறும் சந்தர்ப்பத்தில் பயணித்த பேருந்தின் சில்லில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தாய் மற்றும் மகள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

80 வயதுடைய தாயும் 47 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர்.


எட்டியாந்தோட்டை - வெலிகத்தென்ன பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.