அரச மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...!

Sunday, 22 March 2020 - 13:10

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...%21
கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மலேரியா நோயை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும், க்;ளோரோக்வின் மாத்திரைகள் 5 இலட்சத்தை அரச மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அரச ஒளடதங்கள் தயாரிப்பு கூட்டுப்பானத்தின் தலைவரான மருத்துவர் உத்பல இந்ரவன்ச எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

அரச ஒளடதங்கள் தயாரிப்பு கூட்டுதாபனத்தின் ஊடாக க்ளோரோக்வின் மாத்திரைகள் இதற்கு முன்னைய ஆண்டுகளிலும் மலேரியாவுக்காக தயாரிக்கப்பட்டது.

எனினும் அதற்கு பின்னர் இதற்கான தேவை குறைவடைந்தமையை அடுத்து குறித்த தயாரிப்பு இடைநிறுத்தப்பட்டது.

ஆனால், கொரோனா நிலையை கருத்தில் கொண்டு க்ளோரோக்வின் அதற்கு தீர்வை தரும் என அறிந்த உடனே அதனை மீண்டும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு மற்றும் நேற்று முன்தினம் ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்பட்ட தயாரிப்புக்களில் ஐந்து லட்சம் க்;ளோரோக்வின் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது தற்போது மருத்துவமனைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அதனை நோயாளர்களுக்கு வழங்குவதற்கு விசேட மருத்துவ குழுக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக அனைத்து நோயாளர்களுக்கும் பாரிய நிவாரணம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக அரச ஒளடதங்கள் தயாரிப்பு கூட்டுப்பானத்தின் தலைவரான மருத்துவர் உத்பல இந்ரவன்ச தெரிவித்தார்.

எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் 20 லட்சம் க்ளோரோகிரின் ஓளடதம் தயாரிக்கப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Exclusive Clips