வீடு திரும்ப உள்ள 443 பேர்..!

Friday, 27 March 2020 - 7:35

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+443+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D..%21
வெளிநாடுகளிலிருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் உள்ள 443 பேர் இன்றை தினம் அங்கிலிருந்து வெளியேற்றப்பட உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்கள், பொலனறுவை கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு புனானி தனிமைப்படுத்தல் மையங்கள் உட்பட மேலும் சில தனிமைப்படுத்தல் மையங்கில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பிரதானயான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா , இது குறித்து நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், 678 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது 46 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 868 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுள், 443 பேர் தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு செல்ல உள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.%MCEPASTEBIN%