நாட்டுக்காக ஹிருவின் நிவாரண பயணம்..!

Friday, 27 March 2020 - 7:38

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக, மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ளவர்களுக்காக நாட்டுக்காக ஹிருவின் நிவாரண பயணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, மதத் தளங்களில் உள்ள மதகுருமார்களுக்கும், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கும், முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும் அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்கும் பணிகளை மேற்கொள்ள ஹிரு ஊடக வலையமைப்பு தயாராக உள்ளது.

எனவே, நிவாரணம் அவசியமாகவுள்ள மத வழிபாட்டுத் தளங்கள், சிறுவர் மற்றும் முதியோர் பாராமரிப்பு இல்லங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு ஹிரு ஊடக வலைமைப்பு கேட்டுக்கொள்கின்றது.

0773 035 926 மற்றும் 0773 939 209 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு குறித்த தகவல்களை வழங்க முடியும்.