கர்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்..!

Friday, 27 March 2020 - 9:06

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
கர்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை வழங்குவதற்கு மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணித்தியாலமும் அழைப்பினை ஏற்படுத்தி கர்பிணி தாய்மார்களுக்கு காணப்படும் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய 0710 301 225 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் கர்பிணி தாய்மார்கள் வைத்தியாசலைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே,குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவசர தேவைகளின் போது 1990 என்ற இலக்கதிற்கு அழைத்து ”சுவசெரிய” நோயாளர் காவு வண்டி சேவையை பெற்றுகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது