அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 85 ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...!

Friday, 27 March 2020 - 7:54

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+85+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+268+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...%21
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீனா மற்றும் இத்தாலியை விட அதிகரித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றினால் 85 ஆயிரத்து 268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா வழமைக்கு திரும்பி வருவதாகவும், வழமையான பணிகளை மேற்கொள்ள முடியும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில், வைரஸ் தொற்று துரிதகதியில் அதிகரித்துள்ளது.

தற்போதைய எண்ணிக்கைகளுக்கு அமைய சீனாவில் 81 ஆயிரத்து 285 பேரும், இத்தாலியில் 80 ஆயிரத்து 589 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர் மத்தியில் நேற்று கருத்து தெரிவித்த டொனால்ட்; ட்ரம்ப், உண்மையிலேயே சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதேநேரம், அமெரிக்க பிரதி ஜனாதிபதி மைக் பென்ஸ் மேலதிக தகவல்களை வழங்கியபோது, அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 5 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளவில் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரத்து 615 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 24 ஆயிரத்து 65 பேர் பலியாகியுள்ளனர்.

இதேநேரம், ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 391 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.