கொரோனா தொடர்பில் டொனல்ட் ட்ரம்பின் கருத்துக்கு எதிரான பில் கேட்சின் கருத்துக்கள்....!

Friday, 27 March 2020 - 10:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....%21+
வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களினாலும் மனிதர்கள் உயிரிழக்கின்றனர் ஆகையினால் வாகனங்களை நாம் முடக்குவதில்லை... அதேபோன்று கொரோனாவினால் மனிதர்களை உயிரிழப்பதனால் நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தினை புறக்கணிக்கும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

பொருளாதார சரிவு நோக்கி நாட்டை கொண்டுச்செல்லும் தேவை இதுவரை ஏற்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

ஆனால் மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் வாழ்கின்ற மனிதர்கள் இடைவெளி தொடர்பில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் என்பதோடு தனிமைப்படுத்தலே முக்கியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனா தனது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 6 வாரங்கள் தனிமை்பபடுத்தலினை கையாண்டது.

இந்நிலையில் அந்த நாடு கொரொனாவிலிருந்து சற்று மீண்டுள்ளது.

சீனாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் முந்திக்கொண்டு செல்கின்றது.

இதனை தடுக்க வேண்டுமாயின் அமெரிக்காவை முடக்குவதே சிறந்ததாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதியின் கருதிற்கு முரணான கருத்தொன்றினை முன்வைத்துள்ளார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகள் தங்களது நாடுகளை முடக்குவதில் எந்தவித பொருளாதார பிரச்சினைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களது நாடுகளை முடக்கியுள்ளன.

தெற்காசிய நாடுகள் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்பட்டமையினால் தற்பொழுது அந்த நாடுகள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளன.

ஆனால் அமெரிக்க இதுவரை தனது நாட்டை தனிமைப்படுத்தவில்லை. இந்த நிலையானது கொரோனா வைரஸ் தொற்றினை மேலும் அதிகரிக்க வழிசமைக்கும் என மைக்ரோசொப்ட் நிறுவன ஸ்தாபகர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.