சுவிஸ்லாந்தில் கொரோனாவால் பலியான இலங்கையர்....!

Friday, 27 March 2020 - 9:44

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D....%21
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது இலங்கையர் தொடர்பான தகவல் சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அதிகாரிகள், இதனை உறுதிப்படுத்தியதாக பெர்லினில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சென்-கெலன் பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த 25ஆம் திகதி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 7 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 99 பேர் அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.