தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம்...!

Sunday, 29 March 2020 - 8:03

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...%21
கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

அவதானத்திற்குரிய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை நீடிக்கப்பதற்கு முன்னர் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அதனை மீறிய 5 ஆயிரத்து 704 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி மதியம் 12 மணிமுதல் நேற்று மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 427 வாகனங்கள் குறித்த காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.புதிய முறை ஒன்று அறிமுகம்
Thursday, 28 May 2020 - 10:15

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து... Read More

31 தொடரூந்துகள் சேவையில்..
Thursday, 28 May 2020 - 8:03

பல பிரதேங்களில் இருந்து இன்றைய தினம் 31 தொடரூந்துகள் கொழும்பு... Read More

நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள பூதவுடல்
Thursday, 28 May 2020 - 7:46

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல்... Read More