கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இன்று (வீடியோ)

Sunday, 29 March 2020 - 13:29

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%28%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%29
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மற்றுமொரு இலங்கையர் பிரித்தானியாவில் பலியானார்

70 வயதுடைய ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை கொரனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த ஒருவர் லண்டனில் பலியாகியுள்ளார்.

மஹரகமவை சேர்ந்த இவர் லண்டன் பெல்த்தம் (குநடவாயஅ) பகுதியில் வசித்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

55 வயதான மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான இவர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பலியாகியுள்ளார்.

இதுதவிர இந்த நோய் தாக்கத்தால் முதலாவதாக யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த 59 வயதானவர் சுவிஸ்சலாந்தில் பலியானார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக முதலாவது உயிரிழப்பு நேற்று பதிவாகியுள்ளது.

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில்ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளதோடு நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் என்பன காணப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

அத்துடன் அவர் சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதோடு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நான்காவதாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது இறுதி கிரியைகளை இன்றைய தினத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதனை மருத்துவமனையின் பிரேத அறையிலேயே முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவரது உடலை குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பார்வையிட முடியுமெனவும் மருத்துவ பரிசோதகரின் முன்னிலையிலேயே அவரது இறுதி கிரியைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் மருத்துவமனையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள பூதவுடல்
Thursday, 28 May 2020 - 7:46

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று முற்பகல்... Read More

 20 பேர் வரையில் உயிரிழப்பு
Thursday, 28 May 2020 - 7:48

வருடத்தின் இதுவரையான காலப்குதியில் டெங்கு நோயினால் 20 பேர்... Read More

உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று
Thursday, 28 May 2020 - 7:44

ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல்... Read More