முன்னாள் அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

Sunday, 29 March 2020 - 20:48

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது கூட்டம் ஒன்றை நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த காவற்துறை ஊடக பேச்சாளர் சாலிய சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் செயற்திட்ட விதிகளுக்கு எதிராக அவர் செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவற்துறை பேச்சாளர் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்படவில்லை என்ற போதிலும் இந்த விடயம் தொடர்பில் அவர் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் சாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.


எட்டாவது நாளாக விசாரணைகள் ஆரம்பம்
Thursday, 28 May 2020 - 10:47

ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல்... Read More

கோர விபத்தில் உயிரிழந்த இளம் நடிகை..!
Thursday, 28 May 2020 - 10:40

இளம் நடிகை ஒருவர் சொந்த ஊர் செல்லும்போது வீதி விபத்தில்... Read More

இரு வருடங்கள் வரை அதிகரிக்காது
Thursday, 28 May 2020 - 10:43

மாகாண நிறுவனங்கள் மூலம் அறவிடப்படும் மதிப்பீட்டு வரி இரு... Read More