ட்ரம்பின் கருத்துக்கள் தவறானது.....!

Thursday, 09 April 2020 - 13:03

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.....%21
அமெரிக்க ஜனாதிபதி டொனர்ல்ட் டிரம்ப், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தவறானது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் பாரபட்சமான முறையில் செயல்படுவதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் நிதியினை இடைநிறுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெடேஸ் அதனோம், இந்த விடயத்தினை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு வழங்கும் உதவி ஒத்துழைப்புக்களில் உலக சுகாதார ஸ்தாபனம் பாரபட்சமாக செயல்படுவதாக அமெரிக்க முன்னதாக குற்றம்சாட்டியிருந்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் சிட்னி துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ரூபி பிரின்ஸஸ் பயணிகள் கப்பல் தொடர்பில் அந்த நாட்டின் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கப்பலில் இருந்து வெளியேறிய 2 ஆயிரத்து 700 பயணிகளில் 15 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.

பயணிகள் கப்பல் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கப்பல் கடந்த மாதம் 19 ஆம் திகதி சிட்னி துறைமுகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக ரூபி கப்பலின் தரவுகள் அடங்கிய கருப்பு பெட்டியையும் அவுஸ்திரேலிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை குறித்த தொற்றால் 15 லட்சத்து 19 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 லட்சத்து 30 ஆயிரத்து 860 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அல்-கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...!
Saturday, 06 June 2020 - 9:46

ஃப்ரான்ஸ் இராணுவத்தினர் மாலியில் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா... Read More

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 67 இலட்சத்துக்கும் அதிகம்...!
Friday, 05 June 2020 - 20:12

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை... Read More

மூன்று சந்தேக நபர்கள் கைது...!
Friday, 05 June 2020 - 16:18

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் யானைக்கு... Read More