சடலத்தை தகனம் செய்வதற்கு தடையாக செயற்பட்ட இருவர் காவல் துறையால் அதிரடியாக கைது....!

Friday, 10 April 2020 - 16:31

%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81....%21
கொரோனா வைரஸினால் மரணமடைந்தவரை தகனம் செய்ய முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு இடையூராக செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காலி கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

குறித்த நபரின் சடலத்தினை சர்வதேச தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொது சுகாதார பரிசோதகர்களினால் தடல்ல பொது மயானத்தில் தகனம் செய்ய எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

சடலத்தை தகனம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்ட பொது சுகாதார பரிசோதகர்களை அவரிகளின் கடமையை நிறைவேற்ற விடாது இருவர் இடையூராக செயற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல் துறையினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

36 மற்றும் 69 வயதுடைய தடல்ல பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாத்தறை அக்குரெஸ்ஸ பகுதியை சேர்ந்த ஒருவரின் தந்தையின் சடலமே இவ்வாறு தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..
Saturday, 06 June 2020 - 15:19

மாத்தளை - மஹவெல - மடவலவுல்பன - ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று... Read More

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
Saturday, 06 June 2020 - 14:39

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை... Read More

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை... ஒரே இரவில்  432 பேர் கைது..
Saturday, 06 June 2020 - 14:38

இன்று காலை 05 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல்... Read More