தொடர்ந்தும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு..!

Friday, 24 April 2020 - 18:50

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களுக்கு இன்று இரவு 8 மணி முதல் மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

குறித்த மாட்டங்களில் இன்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
வெளிநாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் உயிர் கொல்லிக்கான ஒளடத ஆராய்ச்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் கிருமிநாசினியை செலுத்துவதன் மூலம் நோயில் இருந்து விடுபட முடியுமா? என ஆராயலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தவிர, நோயாளியின் உடலில் உள்ள கிருமியினை யூ.வி. ஒளியினை பாச்சுவதன் மூலம் அழிக்க முடியுமா? என ஆராயலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்க மருத்துவ சமூகம் தெரிவித்துள்ளது.

மனித உடலினுள் அபாயகரமான பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் கிருமி நாசினியை உட்செலுத்துவதன் மூலம் நச்சு தன்மையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளனர்.

யூ.வி. ஒளி பாச்சுதல் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்தினை உடனடியாக மருத்துவ நிபுணர் ஒருவர் நிராகரித்துள்ளார்.

பாரிய அளவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மரணங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக வெள்ளை மாளிiயில் இடம்பெற்ற நிபுணர்களுடனான சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்த சந்திப்பின் போது, கொரோனா தொற்று மரணங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றினை அமெரிக்க ராஜாங்க உட்துறை பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் தலைவர் வில்லியம் பிராயன் சமர்ப்பித்தார்.Exclusive Clips