பொது மக்களின் சுகாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய யாசகர்களுக்கு நேர்ந்த கதி

Saturday, 23 May 2020 - 7:52

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
புறக்கோட்டை பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களின் சுகாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய யாசகர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மற்றும் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே ஆகியோர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அநாவசியமான முறையில் நடமாடிய 60 யாசகர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , அவர்களை வீரவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட யாசகர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் செயற்பாட்டினை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் , உணவு உள்ளிட்ட தங்குமிட வசதிகளிலின்றி குறித்த யாசகர்கள் கொழும்பு புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அநாவசியமாக நடமாடியதாக நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த காரணிகளை கருத்திற் கொண்ட நீதவான்கள் குறித்த யாசகர்களை வீரவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளனர்.


இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 424ஆக அதிகரிப்பு
Wednesday, 03 June 2020 - 15:25

நாட்டில் மேலும் 6 கடற்படையினர் கொவிட் 19 தொற்றில் இருந்து... Read More