கராச்சி விமான விபத்து- நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிடங்கள் (காணொளி)

Saturday, 23 May 2020 - 9:13

%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்தனர்.

விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையறக்க முயற்சித்தபோது முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து விமானத்தை வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு ஓடுதளத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.

உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி இரண்டு ஓடுதளங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்களாம் என தெரிவித்துள்ளார்.

அப்போது அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரியிடம் அந்த விமானத்தை இயக்கிய கேப்டன் 'லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்ததாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவுசெய்யப்பட்ட விமானி மற்றும் தகவல் அதிகாரியுடனான உரையாடலில் தரையிறங்க சிறிது நேரம் இருக்கும்போது விமானி ' விமானத்தின் எஞ்சின் செயல் இழந்து விட்டது’ என பேசியுள்ளார்.

விமானம் இரண்டாவது முறை தரையிறங்க முயற்சி செய்தபோது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் தான் ஓடுதளத்திற்கு அருகே இருந்த மக்கள் அதிகம் வசித்துவரும் மலிர் நகரின் மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நிமிடங்களில் நடந்ததை அங்கிருந்த பாதுகாப்புக் கமராக்களில் இவ்வாறு பதிவாகியுள்ளது.1 கோடி பெறுதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது
Wednesday, 03 June 2020 - 17:33

கொழும்பு-புறக்கோட்டை பகுதியில் 1 கிலோகிராமுக்கு அதிகளவான... Read More

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More