குண்டு தாக்குதல் திட்டமிடப்பட்ட செயல் ...!

Saturday, 23 May 2020 - 20:31

%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+...%21
ஏப்ரல் 21 ஷங்ரிலா விருந்தகத்தில் தாக்குதல் நடத்திய குண்டுதாரிகள், அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்த விருந்தகத்திற்கு சென்று தாக்குதல் குறித்த ஒத்திகை பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் ஜே.எம். மஹிந்த ஜயசுந்தர நேற்று சாட்சியமளித்தபோது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னதாக ஏப்ரல் 17 ஆம் திகதி, ஷங்ரிலா விருந்தகத்தில் அறை ஒன்றை முன்பதிவு செய்வதற்காக மொஹமட் ஹம்ஷாட் என்ற நபர் அங்கு சென்றிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், சினமன் க்ராண்ட் விருந்தகத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொஹமட் இப்ராஹிம் இன்ஷாப் என்பவரே போலியான பெயரில் அங்கு அறையை முன்பதிவு செய்திருந்தாக விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஷங்ரிலா விருந்தகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹஸீம் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோர், தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஷங்ரிலா விருந்தகத்திற்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும், தாக்குதல் தொடர்பான ஒத்திகைக்கு அங்கு சென்றிருந்தாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக் உயர்வு
Sunday, 07 June 2020 - 11:10

கொரோனா தொற்றுக்குள்ளாகி  பூரணமாக குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின்... Read More

கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
Sunday, 07 June 2020 - 10:58

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி... Read More

சட்டவிரோத மதுபான தயாரிப்பு உபகரணங்கள் மீட்பு
Sunday, 07 June 2020 - 10:45

சீதுவ - துபுலாமுல்ல பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர்... Read More