ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற வளாகத்தில்...!

Wednesday, 27 May 2020 - 13:21

%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்வுட்டில் இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திடீர் உடல்நலக் குறைவினால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்றிரவு கொழும்பில் காலமானார்.

அவரின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையிலிருந்து இன்று காலை, பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு பூதவூடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அமைச்சர் அறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவிக்கிறார்.

பத்தரமுல்லையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தி வருவதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, மலையகத்தின் பல்வேறு பாகங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றி பொதுமக்கள் தங்களின் இரங்கல்கலை தெரிவித்து வருவதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் ஒரு பேரிழப்பாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவுச் செய்தியை கேட்டு, தான் பேரதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்தை துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஒரு மிடுக்கான அரசியல் தலைவர்.

ஆறுமுகன் தொண்டமான் தங்களுடன் நல்லுறவை பேணியதோடு, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்தும் மலையக மக்களுக்கு ஆற்றி பெரும் மதிப்புடன் வாழ்ந்தவர் என ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த முன்னாள் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மலையகத்தின் மூத்த அரசியல்வாதியுமான ரி.வி.சென்னன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips