உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று

Thursday, 28 May 2020 - 7:44

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
ஜுன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகள் எட்டாவது நாளாகவும் இன்று இடம்பெறவுள்ளது.
 
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று ஏழாவது தினமாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
சட்டமா அதிபர் சார்பில் விளக்கமளித்த மேலதிக மன்றாடியர் நாயகம் இந்திக டி சில்வா தமது கருத்துக்களை நேற்று நிறைவு செய்தார்.
 
இதற்கிடையில் இந்த அடிப்படை மனுக்களில் தலையிட்டு விளக்கமளிப்பதற்காக இடைநடுவில் மனுத்தாக்கல் செய்த பேராசிரியர் பண்டுல எதகம சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தமது கருத்துக்களை முன்வைத்தார்.
 
சட்டரீதியாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான விசாரணைகளை இன்றைய தினம் முற்பகல் 10 மணிவரை நீதியரசர்கள் ஆயம் ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips