அமெரிக்காவின் பல நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு....!

Sunday, 31 May 2020 - 10:32

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81....%21
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்;, காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள வன்முறை தாக்குதலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் 30 இற்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

46 வயதான கறுப்பின ஜியோஜ் புயோயிட் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வேளை மரணமானதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களும் வன் செயல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறை வாகனம் பலவற்றிற்கு தீமூட்டி எரித்துள்ளனர்.

காவல்துறையினர் பல நகரங்களில் கண்ணீர் புகை பிரயோகம், மற்றும் இறப்பர் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரி நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நான்கு காவல்துறை அதிகாரிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

சிக்காகோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினரை கல் எறிந்து தாக்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சலீசில் காவல்துறையினரின் பல வாகனங்கள் தீயூட்டப்பட்டுள்ளன.

இந்த செயல்பாடுகளிற்கு சில தரப்பினரே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.


அதேவேளை, கறுப்பின பொதுமகன் கொல்லப்பட்டதற்கு ஈரானிலும் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கறுப்பினத்தவர்களின் உயிர் பெறுமதியற்றதா? என ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மொகமட் ஜவாட் சாரிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னர் ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சு அமெரிக்க காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவத்திற்கு உத்தியோகபூர்வ ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

இன பாகுபாட்டினை வெளிப்படுத்தும் அமெரிக்காவின் பாரபட்சமான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips