பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள வெட்டுக்கிளிகளின் மாதிரிகள் (காணொளி)

Wednesday, 03 June 2020 - 17:45

%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட ஒரு வகையான வெட்டுகிளிகள், தற்போது மாத்தறை மாவட்டத்தில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
மாத்தறை-பூருகமுவ மற்றும் வளகந்த பகுதிகளில் இருந்து இவ்வகை வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பதலேகொட அரசி ஆராய்ச்சி நிறுவன உதவி பணிப்பாளர் எஸ்.ஆர்.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.
 
மாவத்தகம பிரான்சிஸ்கா பகுதியில் முதன் முறையாக இனம் காணப்பட்ட இந்த வெட்டுக்கிளிகள், கடந்த (செவ்வாய்க்கிழமை) மாவனல்லை – அத்னகொட பிரதேசத்திலும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்த வெட்டுக் கிளிகள் மரவள்ளி, தென்னை மரம், சோளம், வாழை போன்ற பயிர்களை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் மாத்தறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் தலைமையில் இன்று களைநாசினி தெளிக்கப்பட்டது. 
 
இதேவளை, தெலிஜ்ஜவில விவசாய ஆராச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மேலதிக ஆராய்ச்சிக்காக வெட்டுக்கிளிகளின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.






Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips