ஜனாதிபதி பொதுமக்களுக்கு வழங்கியுள்ள சலுகை..!

Thursday, 04 June 2020 - 10:29

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88..%21
கொவிட்-19 காரணமாக நாட்டில் முடக்கநிலை அமுலாக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
 
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
இதன்படி 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வருமான வரி மீதான அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பபிட்டுள்ளார்.
 
இதனிடையே த பினேன்ஸ் நிறுவனத்தின் சகல வைப்பாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 6 லட்சம் ரூபாய் வீதம் வழங்கவுள்ளதாக மத்திய வங்கி பிரதமருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips