கேரள யானை விவகாரம்- யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது

Friday, 05 June 2020 - 7:33

%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் உயிரிழந்த கர்ப்பிணி யானையின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
அத்துடன் குறித்த யானையின் வாயில் வெடி பொருளினால் ஏற்பட்ட வெடிப்பு காயம் காணப்படுவதாகவும்  தெரிவியவந்துள்ளது
 
இதன்காரணமாக யானை பல நாட்கள் உணவின்றி இருந்துள்ளதோடு யானை பலவீனமடைவதற்கு வழிவகுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
 
எவ்வாறாயினும் சுவாச கேளாராறு காரணமாகவே யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
யானைக்கு அன்னாசி பழத்துடன் வெடிபொருள் கலந்து கொடுக்கப்பட்டிருந்ததாக முன்னதாக கேரளா வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
 
இதேவேளை சம்பவம் தொடர்பில் இதுவரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குருவொன்று யானை நடமாடிய பகுதிகளை பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


ஸ்கோட் மொரிசன் தெரிவித்துள்ள விடயம்
Thursday, 09 July 2020 - 19:26

அவுஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையினை ஆரம்பிப்பதற்கு ஹொங்கொங்... Read More

சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து விபத்து- 21 பேர் பலி
Wednesday, 08 July 2020 - 13:02

சீனாவில் பேருந்து ஒன்று நீர்த்தேக்கம் ஒன்றில் வீழ்ந்து... Read More

ஜப்பானில் வெள்ளம்- பலியானோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு
Tuesday, 07 July 2020 - 20:39

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள குமமாட்டோ பிராந்தியத்தில்,... Read More