காதலியை காப்பாற்ற உயிரை கொடுத்த காதலன்....!

Saturday, 06 June 2020 - 8:19

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D....%21
மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியில் நீரில் மூழ்கிய காதலியை காப்பாற்ற முயன்ற காதலன் உயிரிழந்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குறித்த இருவரும் நேற்று கடலுக்கு சென்றிருந்த வேளையில் காதலி கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்ட காதலன் தனது காதலியை கரைசேர்த்ததாகவும், அதன்பின்னர் வந்த அலையால் அவர் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மொறட்டுவை-ஏகொடஉயன பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய குறித்த நபரின் காதலி தற்சமயம் பாணந்துரை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.


6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்
Thursday, 09 July 2020 - 18:39

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள் Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
Thursday, 09 July 2020 - 18:15

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 153 பேராக... Read More

பாரவூர்தி மோதி 18 பசுக்கள் பரிதாபமாக இறந்தன
Thursday, 09 July 2020 - 17:41

பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வீதி விஷ்வமடு வெலிக்கந்தல்... Read More