30 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி

Tuesday, 30 June 2020 - 19:09

30+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
தம்புள்ளை - கொனவேவ பிரதேசத்தில், நபர் ஒருவரை  டயர் மூலம் எரித்து கொலை செய்த  சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை நீதவான் சேனரத் பண்டார இலங்கசிங்க இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

30 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாத்தளை குற்றத் தடுப்பு பிரிவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதனை, தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரை தடியினால் தாக்கி கொலை செய்து, நண்பரினால் வழங்கப்பட்ட டயர் ஒன்றில் வைத்து எரித்ததாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் வாக்கமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்த நபரின் மனைவியுடனான தகாத உறவு காரணமாவே இவ்வாறு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் மனைவியிடம்  வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.Exclusive Clips