செனகலில் நீக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

Tuesday, 30 June 2020 - 19:45

+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+
மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.
 
அந்த நாட்டு ஜனாதிபதி மெக்கி ஷால் இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.
 
செனகலில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவையினை ஆரம்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அத்துடன் தொற்று நீக்குதவதற்காக வாரத்தின் ஒரு நாள் பொதுசந்தைகள் அனைத்தையும் மூடுவதாகவும் அறிவித்துள்ளார்.
 
இதேவேளை, தொற்றுதியான ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தமையினால் இரண்டு வாரங்களுக்கு செனகலின் ஜனாதிபதி மெக்கி ஷால் சுயதனிமையில் ஈடுப்பட்டுள்ளார்.
 
இதேவேளை, சர்வதேச ர்Pதியில் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 4 லட்சத்து 36 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.
 
அத்துடன் 5 லட்சத்து 8 ஆயிரத்து 860 பேர் பலியாகியுள்ளனர்.
 
எனினும் உலகளவில் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்த 56 லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Exclusive Clips