ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை..

Wednesday, 01 July 2020 - 7:12

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88..
காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி  என்ற இலத்திரனியல் முறைமை பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
 
ஈ – காணி என்ற இலத்திரனியல் முறைமை பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
 
காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
 
காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் இலத்திரனியல் முறைமை பதிவு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
 
இலத்திரனியல் முறைமை பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணனிமயப்படுத்தப்படும்.
 
பொழிப்பு அறிக்கையை பெற்றுக்கொள்ளும்போது கணினிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும், சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும்  எந்தவொரு நபருக்கோ அல்லது அரச நிறுவனத்திற்கோ இணையதளம் மூலம் காணி பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
 
இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் ஒன்றிணைந்து ஓகஸ்ட் மாதமளவில் இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இவ்வாறு  இலத்திரனியல் முறைமையின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
 


அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!
Thursday, 09 July 2020 - 14:00

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1979ஆக... Read More

25 வீதம் கட்டண சலுகை வழங்குவதற்கு தீர்மானம்
Thursday, 09 July 2020 - 14:05

கடந்த மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 வரையான... Read More

முஸ்லிம் மக்களுக்கு பிதரமர் தெரிவித்த விடயம்...!
Thursday, 09 July 2020 - 13:53

கட்சி பேதம் இன்றி நாட்டில் உள்ள முஸ்லிம் மக்கள் நடப்பு அரசாங்கத்துடன்,... Read More