பொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி..!

Wednesday, 01 July 2020 - 7:27

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
மேல் மாகாணத்தில் முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடிய 162 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணிவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
 
அதேநேரம், முகக்கவசம் இன்றி நடமாடிய மேலும் 905 பேர் காவற்துறையில் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் 159 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும், 91 பேர் ஐஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
 
இதேவேளை, யாழ்ப்பாணம் - பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 4 கிராம் 680 மில்லிகிராம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
 
 
 
 


4 பேரில் ஒருவர் கைது
Thursday, 09 July 2020 - 13:12

அனுராதபுரம் ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை... Read More

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
Thursday, 09 July 2020 - 12:56

கனடாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக சுமமார்  10422,535... Read More

கப்பல் நிர்வாக அதிகாரி ஒருவர் மரணம்..!
Thursday, 09 July 2020 - 12:40

காலி முகத்திடல் பகுதியில் வைத்து கப்பலின் நிர்வாக அதிகாரி... Read More