அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள்

Wednesday, 01 July 2020 - 8:34

%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D++%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
பொதுத் தேர்தலுக்காக அச்சிடப்பட்டுள்ள  வாக்குச்  சீட்டுக்களை  நாளை  அல்லது நாளை மறு தினத்திற்குள்  தேர்தல்கள்  ஆணைக்குழுவிடம்  கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
அரச அச்சகமா அதிபர் கங்காணி லியனகே இதனை தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில், இதுவரை 18 மாவட்டங்களுக்கான  வாக்குச்  சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, திரைப்படங்களின் இடையே அரசியல் கட்சிகளையும், எந்தவொரு வேட்பாளர்களையும் ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து திரையறங்குகளின் உரிமையாளர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுளளது.
 
காவல்துறை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவ்வாறு திரையறங்குகளில் திரையிடல்களின் போது எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் தொடர்பான விளம்பரப்படுத்தல்கள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு சகல காவற்துறை நிலையங்களுக்கும் பதில் காவற்துறை மா அதிபரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
இதேவேளை, அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளும், பொது சுகாதார பரிசோதகர்களும், குடும்பநல தாதிய உத்தியோகத்தர்களும், பொதுத் தேர்தலில் அஞ்சல்மூல வாக்களிக்க ஜுலை 13 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார்.
 
முன்னதாக ஜுலை மாதம் 14,15,16,17 ஆகிய திகதிகளில் அஞ்சல்மூலம் வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜுலை 13 ஆம் திகதி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல தாதிய உத்தியோகத்தர் ஆகியோருக்கு அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 
 


கப்பல் நிர்வாக அதிகாரி ஒருவர் மரணம்..!
Thursday, 09 July 2020 - 12:40

காலி முகத்திடல் பகுதியில் வைத்து கப்பலின் நிர்வாக அதிகாரி... Read More

மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஓர் நற்செய்தி..!
Thursday, 09 July 2020 - 12:04

கடந்த மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 0 முதல் 90 வரையான... Read More

குற்றப்புலனாய்வு பிரிவில் ரிஸாட் பதியுதீன்...!
Thursday, 09 July 2020 - 11:15

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் வாக்குமூலம்... Read More