வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழப்பு

Wednesday, 01 July 2020 - 8:36

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+19+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சிகிச்சை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
 
குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
எரிவாயு கசிவு காரணமாக குறித்த சிகிச்சை நிலையத்தில் இந்த வெடிப்பு இடம்பெற்றிருக்க கூடும் அந்த நாட்டு உயர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி தெஹ்ரானின் அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளன.
 
அத்துடன் இந்த வெடிப்பு சம்பவத்தில் மருத்துவர்கள், நோயாளர்கள் மற்றும் பணியாளர்;கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என குறிப்பிடப்படுகிறது.
 
தெஹ்ரானின் இராணுவத்தளம் ஒன்றிற்கு அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு கசிவு காரணமாக பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
 
அதில் பலர் பலியாகியிருந்த நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 


ரஷ்யாவில் அதிகரிக்கும் மரணங்கள்..!
Saturday, 04 July 2020 - 16:15

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை... Read More

புத்தரின் எண்ணங்கள் தொடர்பில் பிரதமர் மோடி கருத்து
Saturday, 04 July 2020 - 13:44

புத்தரின் எண்ணங்கள் மேலும் பிரகாசம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம்.... Read More

பிரான்ஸ் பிரதமர் பதவியில் இருந்து எட்வர்ட் பிலிப் இராஜினாமா
Saturday, 04 July 2020 - 6:30

கொரோனா வைரசின் தாக்கதால் பிரான்ஸ் அரசு பெரும் பொருளாதார... Read More