பாடசாலைகள் திறப்பது தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு...!

Wednesday, 01 July 2020 - 16:49

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21
நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளினதும், பாடசாலைகளில் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களினதும் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.
 
கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
 
முன்னதாக ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி அனைத்து முன்பள்ளிகளினதும், பாடசாலைகளில் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களினதும் கற்றல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
 
எனினும், ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதனால், 10 ஆம் திகதியே குறித்த கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு பின்னர் அறிவித்தது.
 
அனைத்து தேசிய கல்வியல் கல்லூரிகளிலும், இரண்டாம் வருட மாணவர்கள் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளின் ஆரம்பிப்பது  எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
 
இதேநேரம், அனைத்து ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளும், முதலாம மற்றும் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.