‘வெய்போ’வில் இருந்து வெளியேறிய இந்திய பிரதமர்..!

Thursday, 02 July 2020 - 7:29

%E2%80%98%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E2%80%99%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D..%21
சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்திருக்கும் நிலையில், சீனாவின் சமூக ஊடகமான ‘வெய்போ’வில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது பதிவுகளை நீக்கியுள்ளார்.
 
லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா  மற்றும் சீன படைகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
இதையடுத்து, சீன பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், டிக்டொக், வீசெட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடைசெய்தது.
 
இந்த நிலையில், வெய்போ எனப்படும் சீன சமூக ஊடக தளத்தில் இருந்து பிரதமர் மோடி தனது பதிவுகளை நீக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
பிரதமர் மோடியின் வெய்போ கணக்கில் இருந்த முகப்பு படமும், 115 பதிவுகளும், பின்னூட்டல்களும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், குறித்த சமூக ஊடக கணக்கை நீக்க நீக்க தீர்மானித்துள்ள போதும், பிரமுகர்களின் கணக்கை நீக்கும் செயல்முறை சிக்கலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெய்போ சமூக வலைதளம் பயனாளிகள் தமது கணக்கை நீக்க அனுமதி வழங்குவதில்லை.
 
சீன ஜனாதிபதி ஸ{ ஜின் பிங்குடன் இருக்கும் ஒளிப்படம் இரண்டு மட்டும் மோடியின் கணக்கில் இருப்பதால் அவை அகற்றப்படவில்லை.
 
சீன ஜனாதிபதியின் ஒளிப்படத்தை அனுமதியில்லாமல் வெய்போ நீக்குவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2015 இல் வெய்போவில் இணைந்த இந்தியப் பிரதமர் மோடியை, 2 இலட்சத்து 44 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.