ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்...!

Friday, 03 July 2020 - 15:53

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D...%21
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விளையாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஆராயும் குழுவினரால் இந்த விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


.