காவல்துறையினர் முன்னெடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Saturday, 04 July 2020 - 7:26

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடபுடைய வர்த்தகர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்வதற்கு தனியான விசேட பிரிவு ஒன்றை அமைப்பது தொடர்பாக காவல்துறை அவதானம் செலுத்தியுள்ளது.
 
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரண்டுவார காலப்பகுதியில், குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக அதிகளவான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
இதற்க முன்னர் கைதுசெய்யப்பட்ட எண்ணிக்கையை விடவும் இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
 
இந்த நிலையில், குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் ஈடுபடுபவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தனியான விசாரணை பிரிவை நிறுவ பதில் காவல்துறைமா அதிபர் அவதானம் செலுத்தியுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்;ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips