சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்

Sunday, 05 July 2020 - 15:12

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் புதிய வகையானது அல்லவென சீன விவசாய மற்றும் கிராமியத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இந்த தொற்று மனிதர்களுக்கோ அல்லது விலங்களுக்கோ இலகுவாக தொற்றும் தன்மையை கொண்டிருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இருப்பினும் மாறுப்பட்ட கருத்தினை சீனா விஞ்ஞானிகளை கொண்ட குழுவொன்று தெரிவித்துள்ளது.
 
அவர்களின் ஆய்வுகளுக்கு அமைய ஜீ-4 என அழைக்கப்படும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாரிய முறையில் தொற்றினை ஏற்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் உண்மைத்தன்மையை கண்டறியும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபன அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மேலதிக ஆய்வுகளையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.