“பத்தரமுல்ல பன்டியை” தடுப்பில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி

Sunday, 05 July 2020 - 18:42

%E2%80%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுக்களின் தலைவர் அங்கொட லொக்காவின் உதவியாளரான “பத்தரமுல்ல பன்டியை” எதிர்வரும் 11ஆம் திகதி வரை காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு கடுவலை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
குறித்த நபர் இன்றைய தினம் (05) பத்தரமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இதன்போது குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
இவர் பத்தரமுல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 
அதேபோல களுத்துறை சிறைச்சாலை பேருந்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சிறையில் இருந்த பாதாள குழு தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக இவர் செயற்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips