குசல் மென்டிஸ்க்கு சற்றுமுன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Monday, 06 July 2020 - 11:40

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
வாகன விபத்து ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
இதற்கமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
வடக்கு பாணந்துறை - ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மொண்டிஸ் பயணித்த மகிழுர்ந்து துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் குசல் மென்டிஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இந்த நி;லையில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிஸ் பயணித்த சிற்றூர்ந்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அவிஸ்க்க பெர்ணாண்டோவும் உடன் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.


குருநாகல் நகரசபை தலைவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்
Thursday, 06 August 2020 - 12:29

குருநாகல் நகர முதல்வர், நகர ஆணையாளர் உள்ளிட்ட 3 பேரை பிடியாணைப்... Read More

முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் நேரம் அறிவிப்பு
Thursday, 06 August 2020 - 12:28

நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது... Read More

ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு
Thursday, 06 August 2020 - 11:21

இன்று காலை 8 மணிக்கு பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள்... Read More