எனியோ மொரிக்கோன் காலமானார்.

Monday, 06 July 2020 - 20:00

%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
உலகப் புகழ் பெற்ற இத்தாலிய இசையமைப்பாளர் எனியோ மொரிக்கோன் இன்று ரோமில் தமது 91வது வயதில் காலமானார்.
 
தொடை எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமானதாக இத்தாலிய செய்தி ஸ்தாபனம் அன்சா   செய்தி வெளியிட்டுள்ளது.
 
இவரின் இசையமைப்பில் உருவான மெற்கத்தைய 'ஸ்பாஹெற்றி' இசை மூலமே கிளிண்ட் ஈஸ்ட்வுட்  என்ற பிரபல அமெரிக்க நடிகர் நடித்த 'டொலர் தொடர்' திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.
 
இது தவிர, அவரினால் உருவாக்கப்பட்ட 'வன்ஸ் அப்போன் எ ரைம் இன் அமெரிக்கா', 'அண்ரச்சபிள்ஸ்' மற்றும் 'சினிமா பரடிஸ்சோ'  போன்ற இசை நிகழ்வுகளை இயக்கியவர்.
 
2007 ஆம் ஆண்டு மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒஸ்கார் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
 
ஏழு தசாப்தகாலமாக இசையமைப்பாளராக செயல்பட்ட எனியோ மொரிக்கோன் 500 இற்கும் அதிகமான திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அவரது மரணம் குறித்த செய்தி வெளியானவுடன், இந்தாலிய அமைச்சர் ரொபேட் ஸ்பியரன்சா டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், 'ஒப்பிட முடியாத உயரத்தில் உள்ள இசையமைப்பாளரே, எமது காலத்தில் உணர்ச்சிகரமான பாடல்களை தந்தவரே சென்று வாருங்கள்' என பதிவேற்றியுள்ளார்.
 
 


இந்தியாவில் தீ விபத்து எண்மர் பலி
Thursday, 06 August 2020 - 10:31

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் பகுதியில் அமைந்துள்ள... Read More

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 75ஆம் ஆண்டு நினைவு தினம்
Thursday, 06 August 2020 - 9:22

இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்... Read More

டுபாயில் தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Thursday, 06 August 2020 - 8:51

டுபாய் அஜ்மன் சந்தை தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல்... Read More