வெலிக்கடை சிறைச்சாலையில் சற்று முன்னர் கைதி ஒருவருக்கு கொரோனா..!

Tuesday, 07 July 2020 - 10:01

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

குறித்த நபர் கந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சையளிக்கும் மத்திய நிலையத்தில் புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த தொற்றாளருடன் பழகியவர்களையும், சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள், மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அனைவரையும் பீ சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.