நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் சடலங்கள்

Tuesday, 07 July 2020 - 16:30

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த தாய், தந்தை, மகள் ஆகியோரின் சடலங்கள் இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய தாய், 59 வயதுடைய தந்தை, 34 வயதுடைய அவர்களின் மகள் ஆகியோரின் சடலங்களே நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த ஒருவரே அவர்கள் மூவரையும், கொலை செய்துள்ளதாகவும், தனிப்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி குறித்த மூன்று பேரையும் கொலை செய்த கண்டியை சேர்ந்த நபர், அதற்கு அடுத்த நாள் இலைங்கைக்கு தப்பிவந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த மூன்று பேரின் சடலங்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக எமது செயதிச் சேவை வினவியபோது பதிலளித்த காவல்துறையினர், இது தொடர்பாக இலங்கையில் விசாரணை மேற்கொள்ள முடியாது என்பதனால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பாக அறிக்கையிடுவதாக தெரிவித்தனர்.

இந்த விசாரணைகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம் என இராஜதந்திர ரீதியில் கட்டார் கோரிக்கை விடுக்குமாயின், அதற்கு பதிலளிக்கத் தயார் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, மேலும் நான்கு சடலங்கள் இன்று குறித்த விமானத்தில் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சடலமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் இயற்கை காரணங்களினால் உயிரிழந்தவரிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.