கட்டாரில் கொலை செய்யப்பட்ட இலங்கைக் குடும்பம்- காரணம் வெளியானது (காணொளி)

Tuesday, 07 July 2020 - 17:40

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சம்பவத்தில் 59 வயதுடைய ஆணொருவரும் 55 மற்றும் 34 வயதுடைய பெண்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த 34 வயதுடைய பெண்ணுடன் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற நபரொருவர் காதல் கொண்டதாகவும், பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் அடுத்த தினம் அவர் இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.